கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அதன் பின்னர் வழங்க வேண்டிய சிகிச்சை முன்னெடுக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய கொவிட் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு அதன் பின்னர் வழங்க வேண்டிய சிகிச்சை திட்டதினை தொடங்குவதற்கு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்திய சாலைகள் அபிவிருத்தி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அவ்வாறு ஆயுர்வேத மருத்துவத் துறையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்த நோயாளிகளுக்கான நோய்க்கு பின்னரான சிகிச்சை முறையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
குறித்த தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் நோய் தொற்றுக்கள் மற்றும் உயிரிழப்புகள் நேரிடுவதை தவிர்க்கும் முகமாக குறித்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.



