சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை!

0

கடந்த வருடத்தைப் போன்று இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இவ்வாறு தடைகளையும் மீறி சிலைகள் வைக்கப்படும் என்று அந்த அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் சென்னை காவல் துறையினர் அலுவலகத்தில் நேற்று இந்த அமைப்பை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் தற்போது நிலவும் கொவிட் அச்சுறுத்தல் நிலையினைக் கருத்திற்கொண்டு சமூக அக்கறையுடன் தமிழக அரசு எடுத்துள்ள வழிகாட்டு நெறி முறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிப்பட்டது.

மேலும் சாந்தோம் முதல் நேப்பியார் வரையிலான கடற்கரை பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டனர்.

அவ்வாறு வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளுக்கும் இந்த கட்டுப்பாடு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே வீட்டின் அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைத்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Leave a Reply