மாத்தறை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட நபர் மரணம்!

0

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாத்தறை காவல்துறை அதிகார பிரிவிற்குட்பட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் நபர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு தாக்கப்பட்ட நபர் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் 34 வயதுடைய மெதவாத பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 28 மற்றும் 34 வயதுடைய சந்தேக நபர்கள் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபடவுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply