தமிழ் சினிமாதிரையுலகில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் படவாய்ப்புகள் இல்லாமல் போட்டோஷூட் பக்கம் சென்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் மொட்டைமாடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து பின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான கலக்க போவது யாரில் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் குக்வித் கோமாளி சீசன் 1 ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
இதையடுத்து கடந்த ஆண்டு பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டு 4ஆம் ரன்னர் அப் வாங்கினார்.
தற்போது சூர்யா உள்ளிட்ட முன்னணிநடிகர்கள் படத்தில் நடிக்க கமிட்டாகினார்.
என்னதான் நடிகையானாலும் போட்டோஷூட் பக்கம் செல்லாமலா இருப்பார்.
இதன் பிரகாரம் மீண்டும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா நவரசம் வெப் சீரிஸ் படத்தில் வரும் பிரமோ இசை பாணியில் போட்டோஷூட் நடத்தி வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.



