வேதனை முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் ஆசிரியர்கள் சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதற்கமைய குறித்த போராட்டம் இன்றுடன் 59 வது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.
அத்துடன் தமது கோரிக்கைக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி அல்லது நிதியமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடல் வரையில் தமது இந்த போராட்டம் தொடர்ந்து செல்லும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது தொழிற் சங்கதினால் போராட்டத்தினால் மாணவர்கள் எதிர்நோக்கியுள்ள அசௌகரியத்திற்கு முழுப் பொறுப்பினையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிபர் தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதியுடனும், நிதி அமைச்சர் உடனும் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இது வரையில் அதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.



