இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் தொடர்பில் வெளியான தகவல்!

0

சர்வதேச நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றுக்கு 40 ரூபாய் இறக்குமதி வரி விதிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த தகவலை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்துக்கு விதிக்கப்பட்டுள்ள வரி அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரிய வெங்காய உற்பத்தியாளர்களை பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply