தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தான் விஜய்.
இவர் பிகில், மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது சென்னையில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
அத்துடன் நடிகர் விஜய் எப்போதுஞாயிற்று கிழமைகளில் படப்பிடிப்பிற்கு செல்வது கிடையாது.
ஞாயிற்று கிழமை குடும்பத்தினருடன் செலவிட வேண்டும் என்பதற்காக தான். ஒருசில முக்கிய காரணங்களுக்காக வெளியில் செல்வார் விஜய்.
அந்தவகையில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு நடிகர் விஜய் சென்றுள்ள வீடியோ புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மேலும் அவருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன், மற்றும் நடிகர் ஜெயம் ரவி, நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




