திருகோணமலையில் கொவிட்19 கலந்துரையாடல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

0

கொவிட்19 கலந்துரையாடல் தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் இன்றுநடைபெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடல் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் . சமன் தர்சன பாண்டிகோராள அவர்களின் தலைமையில்இடம்பெற்றது.

இங்கு உரையாற்றிய குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்கள் விசேடமானதும் மிகவும் அவசியமானதுமான வேண்டுகோளாக கொரோனா COVID19 தாக்கம் தவிர்ந்த ஏனைய காரணங்களால் மரணிப்பவர்களின் பிரேதங்களை திருகோணமலைக்கு அனுப்பி பரிசோதனை செய்து உரிய பகுதியில் வைத்தே உரிய COVID19 பரிசோதனைகளை மேற்கொண்டு அரச சுற்றுநிருபத்துக்கு ஏற்ப உடல்களை அடக்குவதற்காக உறவினர்களுக்கு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

இதன் பயனாக இவ்விடயத்தை உரியவர்களுக்கு அறிவுறுத்தி எடுத்துரைப்பதாக அங்கு முடிவு எடுக்கப்பட்டது.

அத்துடன் குச்சவெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட தனியார் ஆயுள்வேத மருந்தகங்களை மறுஅறிவித்தல் வரை மூடப்பட இருப்பதாகவும் தவிசாளரினால் இங்கு எடுத்துரைக்கப்பட்டது.

Leave a Reply