அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற மரணச்சடங்கு ஒன்றில் சுமார் 600 பேர் கலந்து கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி நபர் ஒருவர் கடந்த 2ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரின் இறுதி சடங்கிற்கு குறித்த நபர்கள் பங்கேற்றுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மேலும் குறித்த சடங்கை இந்த நபருடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் கிராமத்தினர் இனைந்து முன்னெடுத்திருந்தனர்.
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் சிறுவர்களும் பங்கேற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



