யாழ் பருத்தித்துறை வீதியில் மேல் மாடி வீடு ஒன்றில் தீ பரவல் ஏற்படடுள்ளது.
குறித்த தீ விபத்து இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
அத்துடன் அந்த வீட்டில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
மேலும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு அங்கு வசிக்கும் பெண் ஆலயம் சென்று திரும்பிய நிலையில் வீடுக்குள் தீ விபத்து இடம்பெற்றதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காவல்துறையில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



