ஊரடங்கு தொடர்பில் இன்று வெளியாகவுள்ள இறுதி முடிவு!

0

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டமானது தொடர்ந்து நீடிக்கப்படுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் இன்று இறுதி முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவையும் நீடித்தால் சிறந்த பெறுபேற்றை பெற முடியும் என ராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முன்னர் போன்று பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply