வரலாற்று சிறப்புமிக்க யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா தொடர்பில் வெளியான தகவல்!

0

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 அசாதாரண சூழ்நிலை காரணமாக
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த ஜூன் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் கொவிட் அச்சுறுத்தல் நிலை காரணத்தினால் செப்டம்பர் 6ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் தற்போது கொவிட் தொற்றின் தீவிரம் அதிகரித்துள்ளதால் இம்மாதம் 6ஆம் திகதியும் குறித்த மகோற்சவத்தினை நடத்த முடியாத நிலை தோன்றியுள்ளதாக நயினாதீவு ஆலய அறங்காவலர் சபையினர் வைத்துள்ளனர்.

Leave a Reply