இலங்கை சக்கரை நிறுவனத்தினால் இன்று முதல் நாடு பூராகவும் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு சீனி விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வாக்கும்புர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை முதல் குறித்த விற்பனை நிலையங்கள் ஊடாக 130 ரூபாவிற்கு சீனி விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் அதிக விலை கொடுத்து சீனியை கொள்வனவு செய்ய வேண்டாம் என அறிவித்துள்ளார்.



