2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவுக்கு தெரிவுவான குடும்பகங்களின் எண்ணிக்கை!

0

இங்கையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காலப்பகுதியில் தமது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் 2000 ரூபாய் நிவாரண கொடுப்பனவாக வழங்கப்பட்டது.

இதனடிப்படையில் 5 இலட்சத்து 75 ஆயிரத்து 520 குடும்பங்களுக்கே குறித்த நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலையில் முதற்கட்டமாக குறித்த கொடுப்பனவுகள் கடந்த 23ஆம் திகதி முதல் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்கப்பட்டது,

மேலும் இந்த 2 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை பெறுவதற்கு 20 இலட்சத்து 38 ஆயிரத்து 530 குடும்பங்கள், தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply