இலங்கையில் சீனியின் விலையில் திடீர் அதிகரிப்பு!

0

தற்போது சீனியின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் பாரிய இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய ஒரு வார காலப் பகுதிக்குள் ஒரு கிலோ சீனியின் விலை 50 ரூபாவினால் விலை உயர்வடைந்துள்ளது.

தற்போது ஒரு கிலோ சீனியின் விலை 210 ரூபாவாக காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் நிதி அமைச்சருக்கும், வர்த்தகத் துறை அமைச்சருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிலையில் சீனியின் விலை 210 ரூபாவுக்கு விற்பனை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் உணவகங்களில் ஒரு கோப்பை தேநீரின் விலை 25 ரூபாவால் அதிகரிப்பு வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளனர்.

மேலும் நாட்டில் ஒருவாரத்துக்கு தேவையான சீனிகள் கையிருபில் உள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரி

Leave a Reply