நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ள காஜல் அகர்வால்.

0

தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய நடிகை தான் காஜல் அகர்வால்.

இவர் தென்னிந்தியாவின் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தார்.

அத்துடன் மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் கௌதம் என்பவரை மணம் முடித்துக் கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்தும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிரகாரம் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது.

மேலும் அண்மையில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற சீரிஸும் வெளியாகியிருந்தது.

தற்போது காஜல் அடுத்ததாக நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த படத்தின் புதிய அறிவிப்பு போஸ்டர் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

Leave a Reply