வரலாற்றில் முதல் முறையாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.
குறித்த சத்திர சிகிச்சையானது நாட்டில் நிலவும் கொவிட் சூழலுக்கு மத்தியிலும் கடந்த 18 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
விபத்தில் மூளை இறந்த நிலையில் இருந்த இளம் நோயாளி ஒருவரின் சிறுநீரகத்தை இரண்டு சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொருத்தியே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
மேலும் மூளை இறந்த நிலையில் இருந்த இளம் நோயாளியின் சிறுநீரகத்தை தாமாகவே முன் வந்து தானம் செய்த நோயாளியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் நன்றியினை தெரிவித்துள்ளது.



