தற்போது நாட்டில் டெல்டா தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகின்றது.
இதனடப்படையில் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்தவித அறிகுறிகளும் வெளிக்காட்டாமல் மாரடைப்பும் மாத்திரம் ஏற்படக் கூடிய அபாய நிலை காணப்படுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மார்பு சிகிச்சைப் பிரிவின் வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நிலவுவது மிகவும் ஆபத்தான நிலை என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் கடந்த வாரத்தில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுக்கு 20 க்கு அதிகமானவர்களுக்கு அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்இந்த அபாய நிலை காரணமாக யாராவதுக்கேனும் மரடைப்பு ஏற்படுவதற்கானா அடிப்படை அறிகுறிகள் வெளிப்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிப்பது மிகவும் கட்டாயம் என வைத்திய நிபுணர் கோட்டாபய ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.



