யாழில் இந்த மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் 72 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்ட செயலகத்தில் கொவிட் புள்ளி விபர அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 206 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் யாழ் பிரதேச செயலாளர் பிரிவில்லையே அதிகளவிலான மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



