ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுகிறது!

0

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத்திற்கு தினமும் 15 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படும் என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாடு முடக்கப்படுவது தொடர்ந்தும் நீடிக்கப்படாது முடிந்தவரை குறுகிய காலத்தில் திறக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இவ்வாறான சூழ்நிலைகள் ஏற்படும் போது நாட்டின் வளர்ச்சி வீதம் மற்றும் உள் நாட்டு உற்பத்தி என்பனவும் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் நாட்டை முடக்குவதால் ஏற்படும் விளைவுகளை குறைக்க வேண்டுமாயின் நாம் நாட்டை விரைவில் இயல்பான நிலைக்குக் கொண்டு வரப்படும் எனவும் நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Leave a Reply