நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டாம்!

0

கொவிட் தொற்றுப் பரவல் நிலை காரணத்தினால் அவசரகால நிலையை கருத்தில் கொண்டு நீதிபதிகளுக்கு அரசாங்கம் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

இந்நிலையில் கொவிட் தொற்றுப் பரவல் நிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத பிரதிவாதிகள் அல்லது சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பிக்க வேண்டாம் என்று நீதிச் சேவைகள் ஆணைக்குழு நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அத்துடன் அத்தியாவசிய வழக்குகளுக்காக மாத்திரமே நீதிமன்றத்தை திறக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு புதிதாக வழங்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பான சந்தேக நபர்களை மாத்திரம் நீதிமன்றுக்கு அழைக்க வேண்டும் என்றும் நீதிபதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளில் சந்தேக நபர்களையும் பிரதிவாதிகளையும் அழைப்பதற்கு அவர்களின் சட்டத்தரணிகளின் பிரதிநிதித்துவம் மாத்திரமே போதுமானது என்றும் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply