ஆபத்தான நிலையிலுள்ள இலங்கை!

0

நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் சில புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..

இதற்கமைய 3,110 பேரே இவ்வாறு புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

அத்துடன் மேற்படி தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் புது வருட கொவிட் கொத்தணி யுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 388,806ஆக உயர் வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply