உத்தர பிரதேசத்தில் பாரபங்கி மாவட்டத்தின் ஜாயித் பகுதியில் சிலர் சட்டவிரோத மருத்துவ மையம் நடத்தி வருவது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் கொவிட் தடுப்பூசியினை போடுவதற்காக திறக்கப்பட்ட இந்த மையம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கு கொவிஷீல்ட் தடுப்பூசிகள் குப்பிகளும், போலி தடுப்பூசி அட்டைகளும் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் பொரித்த மையத்தை நடத்தி வந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த தடுப்பூசிகள் அனைத்தும் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் இருந்து திருடி வந்து குறித்த மையத்தில் வைத்து மக்களுக்கு போடப்பட்ட தாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் குறித்த போலி தடுப்பூசிகள் மையம் குறித்த விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



