கொவிட் 19 தொற்று பரவல் கட்டுப்பாட்டு செயலணி கூட்டம் தற்பிபோ து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைய குறித்த கலந்துரையாடலுக்கு முன்னதாக ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
அத்துடன் தற்போது நாட்டில் நிலவும் கொவிட் 19 நிலையினைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றி அது தொடர்பில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் உரை இடம்பெறும் திகதி மற்றும் நேரம் தொடர்பான தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகிய பதவிகளில் மாற்றம் செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்படுள்ளது.



