இலங்கையில் மேலும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானம்!

0

இலங்கையில் தற்போது மிக வேகமாக பரவலடையும் கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் இன்றும் மேலும் சில நகரங்களை முடக்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மாத்தறை ஊருபொக்க நகரம் மற்றும் ஹிக்கடுவை நகரம் என்பன முடக்கப்பட்டவுள்ளதாக அறிவித்துள்ளது.

அவ்வாறு நாளை முதல் காலி மாவட்டத்தில் ஹபராதுவ மற்றும் மொனராகலை மாவட்டத்தின் படகும்புர ஆகிய நகரங்களை முடக்குவதற்கு வர்த்தக சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் குருநாகல் மாவட்டத்தில் வாரிய நகரம் நாளை மறுதினம் முதல் முடக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வர்த்தக சங்கத்தினால் நகரங்களில் உள்ள தங்கள் வர்த்தக நிலையங்களில் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மருந்தகங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் உட்பட அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிலையங்கள் மூடப்பட மாட்டாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply