உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் தொடரும்.

0

உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது தொழிற்சங் போராட்டம் தொடர்ந்து செல்லும் என அதிபர், ஆசிரியர் தொழிற் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய விசேட கலந்துரையாடல் ஒன்று
நேற்றைய தினம் அதிபர், ஆசிரியர் சங்கங்களுக்கும் அமைச்சரவை உபகுழுவுக்கும் இடையில் இடம்பெற்றது.

அத்துடன் அதிபர் ஆசிரியர்களின் வேதன முரண்பாடுகள் குறித்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குறித்த உப குழு நியமிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த சந்திப்பானது நேற்று மாலை அமைச்சர் விமல் வீரவன்ச இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது அதிபர் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டு இருந்ததாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் தமக்கு இதற்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தமது தொழிற்சங்க போராட்டம் நிறுத்தப்படாது என அதிபர் ,ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply