இன்னும் சற்று நேரத்தில் அமைச்சரவையில் புதிய மாற்றம் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர்களாக 7 பேர் பதவியேற்கவுள்ளனர்..
குறித்த மாற்றத்தின் போது அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, டலஸ் அழகப்பெரும, ஜி எல் பீரிஸ் மற்றும் தினேஷ் குணவர்த்தன ஆகிய அமைச்சர்களின் அமைச்சு பொறுப்பிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



