இந்தியாவில் செலுத்தப்பட தடுப்பூசிகள்!

0

உலகளாவிய ரீதியில் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவிலும் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது.

இதற்கமைய இந்தியாவில் தற்போது வரை 54.58 கோடி (54,58,57,108 ) பேருக்கு குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 18 வயது முதல் 44 வயதுடையவருக்கு முதல் தடவையாக 19,68,99, 466 பேருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதுடன் 1,54,10,416 பேருக்குக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் 45 வயது முதல் 59 வயதுடையோருக்கு முதல் தடவையாக 11,73,89,912 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதுடன் 5,57,91,230 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் தடவையாக 8, 11,53,834 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 4,03,08,964 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார பணியாளர்கள் 1,03,50,751 பேருக்கும் முதல் தவணைத் தடுப்பூசியும் 81,00,615 பேருக்கு 2 வது தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply