நாடாளுமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் மேற்கொள்ளுவதற்காக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு இடம்பெறவுள்ளது
அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகளை நடத்துதல் போன்ற ஏனைய விடயங்கள் தொடர்பிலும் இந்த கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
மேலும் நாடாளுமன்றில் மற்றும் சேவையாற்றும் சில பிரிவுகளின் அதிகாரிகள் சிலருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டவர்களை அடையாளம் காண்பதற்காக சிசிடிவி காணொளி காட்சிகள் ஆராயப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுள்ளது.



