தமிழ் சினிமாவில் வடிவேலுக்கு அடுத்தபடியாக காமெடி ஜாம்பவானாக திகழ்ந்தவர் தான் நடிகர் விவேக்.
இவர் சமூக கருத்துக்கள் நிறைந்த காமெடிகளால் பல விருதுகளை பெற்று மக்கள் மனதை கவர்ந்தவர்.
நடிப்பு ஒரு பக்கம் இருக்க பல லட்சத்திற்கு மேலான மரம் நடுவதில் அனைத்து பிரபலங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர்.
நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இவரது உடல் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகர் விவேக் பற்றிய அனுபவங்களை கூடுதலான பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தற்பொழுதும் பகிர்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடிகர் விவேக் கடைசியாக பங்கேற்ற காமெடி வீடியோ வை ஷேர் செய்துள்ளார்.
இதற்கமைய பல காமெடி நடிகர்கள் பங்கேற்ற எங்க சிரிப்போம் என்ற நிகழ்ச்சியில் நடிகர் சிவாவுடன் சேர்ந்து காமெடி அரட்டை செய்துள்ளார் நடிகர் விவேக்.



