கிண்ணியா பிரதேச செயலாளராக கடமையாற்றி வெருகல் பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்ற எம்.எச். .முகம்மது கனி அவர்களின் சேவைநலன் பாராட்டு விழா நேற்றைய தினம் இடம் பெற்றது.
கிண்ணியா உலமா சபை கிளை அலுவலகத்தில் வைத்து இடம் பெற்றது.
கிண்ணியா உலமா சபை தலைவர் ஏ.எம். ஹிதாயத்துள்ளாஹ் நளீமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதில் கிண்ணியா சூரா சபை கிண்ணியா பள்ளிவாயல்கள் ஒன்றியம் ஆகிய சிவில் அமைப்பின் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.
தற்போதைய கால சூழ்நிலையை கவனத்தில் கொண்டு மிகக் குறைந்த அளவான உறுப்பினர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்.
இதன் போது பிரதேச செயலாளர் கடமையாற்றிய காலப்பகுதியில் சிவில் சமூகத்தின் உடன் ஒத்துழைப்புடன் செயல்பட்டது பற்றி ஞாபகப்படுத்த பட்டது .
மேலும் பிரதேச செயலாளர் கனி அவர்கள் நன்றியுரையை எதிர்காலத்திலும் ஒரு சமூக செயலாளராக சிவில் அமைப்புடன் இணைந்து செயல்பட முடியும் என்று தெரிவித்தார்.
சிவில் அமைப்புக்களினால் ஞாபக சின்னங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கி வழங்கி வைக்கப்பட்டன.



