கேரள மாநிலத்தில் ஓணம், பண்டிகை கொண்டாடுவதற்கு தடை!

0

கேரள மாநிலத்தில் தற்போது வரையில் கொவிட் தொற்று கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

இதனால் நாடு பூராகவும் இடம்பெற்ற பாதிப்பில் கேரளாவில் மாத்திரம் 50 சதவீதமான பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில் ஓணம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து கொண்டாடப்படுகின்றன.

இவ்வாறான நிகழ்வுகளின் போதும் மக்கள் பெருமளவில் ஒன்று கூட வேண்டிய சந்தர்ப்பம் உள்ளது.

இதனால் அதிக தொற்றுப் பரவலுக்கு வழிவகுப்பதற்குரிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்நிலையில் கேரளா அரசினால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டிகைகளையொட்டி, உள்ளூர் மட்டத்திலான கட்டுப்பாடுகள் 12ஆம் திகதி அதாவது இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.

ஓணம் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளை பொதுவிடங்களில் கொண்டாடவோ அல்லது பெருமளவில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது வரையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் மற்றும் தடுப்பூசியினை போட இயலாதவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே செல்ல முடியும் என்பதுடன் இத்தகையனவர்களுக்கு கடைக்காரர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

Leave a Reply