பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரத்தில் 27 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி!

0

இந்தியாவில் கொவிட் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்து வந்த நிலையில் சில மாநிலங்களில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டது.

இந்நிலையில் மேலும் கொவிட் பரவல்கள் குறித்து சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 2 ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்பட்டன.

குறித்த பள்ளிகள் திறக்கப்பட்டதை யொட்டி கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மாணவ மாணவியர் பள்ளிகளுக்கு ஆர்வமுடன் கல்வி கற்க சென்றிருந்தனர்.

இந்நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில் ஐந்து அரசு பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட அனைத்து மாணவர்களும் அவர் அவர்களது வீடுகளில் வைத்து தனிமைப்படுத்தப்பட்டு அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply