பண்ணை கடலில் தவறி விழுந்து உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
பண்ணை பாலத்தடியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்களுடன் பொழுதைக்கழித்துக்கொண்டு இருந்த வேளை தவறி கடலினுள் விழுந்த 31 வயதுடைய கே.கௌதமன் எனும் இளைஞன் உயிரிழந்திருந்தார்.
அவரது சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அதனை அடுத்து சுகாதார பிரிவினர் சடலத்தை பொறுப்பெடுத்து கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.



