அதிபர் ஆசிரியர்களின் 24 வருட கால மாக நிலவும் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறும் கொத்தலாவல சட்ட மூலத்தை நீக்க கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்றையதினம் இடம் பெற்றது.
குறித்த போராட்டமானது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மூதூர்
கிளையினால் மேற்கொள்ளப்பட்டது.
மூதூர் மணிக்கூட்டு கோபுரம் வழிமாக மூதூர் வலய கல்வி அலுவலகம் வரை பிரதான வீதிஊடாக தங்களது கோசங்களை எழுப்பி நடை பவணியாக சென்றிருந்தனர்.
இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் அதிபர்கள் என கலந்து கொண்டனர்.



