தம்பலகாமம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட பரவி பாஞ்சான் குளத்தை அண்டிய காட்டு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார்
குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்
உயிரிழந்தவர் 14 கொலனி வென்ராசன்புர, கந்தளாவைச் சேந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான ஆர்.எம்.சந்தன பிரேம காந்த வயது – 55 என காவற்துறை யினர்தெரிவித்தனர்
திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணையின் பின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் காவற்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்



