இணைய வழி கற்பித்தல் செயற்பாடினால் பாதிக்கப்படும் மாணவர்கள்!

0

கொவிட் தொற்றுப் பரவல் காரணத்தினால் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் பாடசாலை மாணவர்களுக்குஇணைய வழி கற்பித்தல் செயற்பாடு நடத்தப்பட்டு வருகின்றது.

இதன் காரணத்தால் பல்வேறு விதமான பாதிப்புகள் தொடர்பாக எம்.பி. க்கள் கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் விளையாட்டு நலன் துறையை நிலை குழுவினர் ஆகியோர் இணைந்து இந்த இணைய வழி கற்பித்தல் ஏற்பாடு மீது ஓர் ஆய்வினை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பான அறிக்கையை நிலைக்குழு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதற்கமைய இந்த பள்ளிகளை தொடர்ச்சியாக மூடப்பட்டு இணைய வழி கற்பித்தல் வகுப்புக்கள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு மன ரீதியாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இணையவழி கற்பித்தல் பாடத்திட்டத்தால் அவர்கள் கல்வி கற்கும் திறன் குறைந்து காணப்படுகின்றது.

அத்துடன் குழந்தைகள் உறவில்
பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன இந்தக் குழந்தைகள் பல்வேறு விதமான குழப்பங்களுக்கும் ஆளாகின்றனர்.

அது மாத்திரமில்லாமல் சமூக ரீதியாக பெண் குழந்தைகள் இதில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதுடன் பல இடங்களில் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply