ஆடி அமாவாசையின் சிறப்பம்சங்கள்.

0

இந்து சமயத்தில் மிகப் புனிதமான நாளாக அமாவாசை விளங்குகிறது.

அதிலும் ஆடி அமாவாசை என்றாலே மேலும் சிறப்பானதாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாளாக காணப்படுகின்றது.

ஆடி அமாவாசை வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து அன்னதானம் செய்யுங்க -  முன்னோர்களின் ஆசி கிடைக்கும் | Aadi Amavasai how to welcome our ancestor in  corona lockdown period - Tamil ...

இதற்கமைய அமாவாசை என்பது வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் கூடுகின்ற காலம்தான் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்றும் சந்திரனை “மாதுர் காரகன்” என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இதனால்தான் சூரியன் சந்திரனை நாம் மாதா பிதாக்களாக கருதி வழிபடுகின்றோம்.

இந்த அமாவாசை நாளில் பெற்றோரை இறந்தவர்கள் வழிபாடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஆடி அமாவாசை விரதம் யார் இருக்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

இந்த விரதம் ஆண் பெண்களுக்கான விரத முறையாகும்.
முதலில் ஆடி அமாவாசை எப்போது என்பது பற்றி ஆராய்வோம்.?
2021 ஆகஸ்ட் 8ஆம் திகதி அதாவது ஆடி மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகின்றது.

இந்த அமாவாசை திகதி ஆகஸ்ட் 7 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.38 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் திகதி இரவு 7.56 மணி வரை அமாவாசை நீடிக்கும்.

மூன்று முக்கிய அமாவாசை இருக்கின்றது.

அமாவாசையில் ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகியவை மிக சிறப்பானதாக கொண்டாடப்படுகிறது.

ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் பிதுர் லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு தன் வம்சம் , தலைமுறை எப்படி இருக்கிறது என பார்க்க வருவதாக கூறப்படுகின்றது.

ஆடி அமாவாசை அன்று பூலோகத்தை பித்ருக்கள் வந்தடைகின்றனர்.

Thai Amavasai 2021 Significance: தை அமாவாசை 2021 எப்போது? - ஏன் முன்னோர்களை  வணங்க வேண்டும், தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் இதோ - Samayam Tamil

தை அமாவாசை தினத்தில் மீண்டும் பிதுர் லோகத்திற்கு நம் பிதுர்கள் கிளம்புவதாக ஐதீகம்.

ஆடி அமாவாசை அன்று ஏன் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
நாம் ஆடி அமாவாசை தினத்தன்று செய்ய வேண்டியவை :

ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நீராடி பின்னர் சிவாலயத்தில் எம்பெருமானை வழிபட்டு பிதிர்களுக்குரிய தர்ப்பணம் கொடுப்பது அவசியம்.

பின்னர் அன்னதானம் செய்தல் இந்நாளில் முக்கியத்துவம் வாய்ந்த செயலாக கூறப்படுகின்றது.

ஆடி அமாவாசை கதை || Aadi Amavasai story

இந்த அற்புதமான நல்ல நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர்களின் ஆசீர்வாதம் பெற்று விடலாம் என நம்பப்படுகின்றது.

தரப்படும் எங்கு கொடுக்க வேண்டும்?
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து தர்ப்பணம், சிரார்த்தம் கொடுப்பதால் பிதுர்களின் தோஷங்களில் நீங்கும் என்பது இந்து சமயத்தின் நம்பிக்கை.

ஆடி அமாவாசை தினத்தில் கடல் அல்லது புனித நதி, ஆறு, நீர் நிலைகளில் நீராடி இறைவனை வழிபட்டால் நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி நற்கதி அதாவது விமோசனம் அடையும்.

நீர்நிலைகள் அருகில் இல்லாவிட்டால் பரவாயில்லை, வீட்டிலேயே ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு பின்னர்”ஓம் கங்கா தேவியை நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து விட்டு நாம் நீராடலாம்.

ஆடி அமாவாசை சிறப்பு!!! – விவேக பாரதி

வீட்டிலேயே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்கள் அருகிலுள்ள நீர்நிலைகளில் சேர்த்து விடலாம்.

Leave a Reply