திருமண நிகழ்வுகள் தொடர்பில் வெளியான புதிய சுகாதார நடைமுறைகள்!

0

கொவிட் தொற்றின் தாக்கம் தீவிரம் பெற்று வருவதினால் மக்களின் பாதுகாப்பு கருதி திருமண வைபவங்களில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தபட்டுள்ளது.

இந்நிலையில் 500 இருக்கைகள் காணப்படும் மண்டபங்களில் 150 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 500 இருக்கைகளுக்கு குறைந்த திருமண மண்டபங்களில் இடம்பெறும் நிகழ்வுகளில் 100 பேருக்கு மாத்திரமே அனுமதி உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் உடன் அமுலுக்கு வரும் வகையிலேயே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணச் சடங்குகளில் 25 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply