25 நாளாகவும் தொடர்ந்து செல்லும் அதிபர்கள் ,ஆசிரியர்கள் சங்கங்களின் போராட்டம்.

0

இணையவழி கற்றல் செயற்பாட்டை புறக்கணித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் இன்றுடன் 25 நாளாகவும் போராட்டம் தொடர்ந்து செல்கிறது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஆசிரியர்கள் அதிபர்கள் சங்கங்கள் இன்று சகல தனியார் மற்றும் அரசு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அத்துடன் குறித்த சங்கத்தினால் நடத்தப்பட்டிருந் பேரணியில் பங்கேற்று மீள திரும்பிய நிலையில் கைதான ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேரையும் தலா ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் தமது கோரிக்கைகளுக்கு இதுவரையில் எந்தவிமான தீர்வும் வழங்கப்படாமையின் காரணத்தால் இதுகுறித்து தீர்மானிப்பதற்காக சகல தனியார் மற்றும் அரச தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply