டோக்கியோ ஒலிம்பிக் பதக்க வரிசையில் இந்தியாவுக்கு 66 வது இடம்!

0

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஜெர்மனியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இதற்கமைய இந்தியா ஒரு வெள்ளி, 3 வெண்கல பதக்கம் ஆகியவற்றினை பெற்றுள்ளது.

அத்துடன் நான்கு பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலின் வரிசையில் 66 வது இடத்திலுள்ளது.

அவ்வாறு மல்யுத்தம் போட்டியில் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பெற்றுள்ளதால் இந்தியா அதில் 59 ஆவது இடத்தில் முன்னேறும்.

அத்துடன் தங்கம் வென்றால் 43 வது இடத்திற்கு முன்னேற சந்தர்ப்பம் உள்ளது.

மேலும் சீனா 32 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலப் பதக்கங்களுடன் முதல் இடம் வகிக்கின்றது.

அவ்வாறு 27 தங்கம், 33 வெள்ளி, 24 வெண்கலப் பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

குறித்த போட்டியை நடத்தும் ஜப்பான் 21 தங்கம், 7 வெள்ளி, 12 வெண்கலப் பதக்கங்களுடன் 3 வது இடத்தை பிடித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply