நாடு பூராகவும் கட்டுப்பாடுகளின்றி கொவிட் தொற்றின் தாக்கம் மிக வேகமாக பரவலடைந்து வருகிறது.
இதனால் தற்போது சுகாதாரத் துறையினர் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் தற்போது வைத்தியசாலைகளில் நிலவும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டே இவ்வாறு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு கொவிட் தொற்றாளர்களின் அதிகரிப்பு மற்றும் வைத்தியசாலை பணிக் குழாமினர் சிலருக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டமை இது போன்ற காரணங்களுக்கு இப்ப அவருக்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சுகாதாரத் துறை வரலாற்றில் வைத்தியசாலைகளில் இது போன்ற அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களை மிகக் குறைவாகவே காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.



