சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

0

மட்டக்களப்பு வாழைச்சேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஓமனிய மடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினை வைத்திருந்த நபர் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கமைய குறித்த நபர் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 58 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply