ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை துறை சார்ந்தவர்களுக்கு அடுத்த 2வது தடுப்பூசி வழங்கி நிறைவு செய்யப்பட்டதன் பின்னர் அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என கல்வியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றில் இதுவரையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாதுள்ள நிலையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்தோரை வழமையான பணிக்கு அழைத்துள்ளமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
மேலும் குறித்த பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாகவே தற்போது இதற்குரிய நிர்வாக தரப்பினர் அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



