இன்று முதல் இலங்கையில் லன்ச் ஷீட்க்கு தடை!

0

இலங்கையில் இன்று முதல் பொழுதீன் மூலம் தயாரிக்கப்படும் உக்காத லன்ச் ஷீட் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அதனை உற்பத்தி செய்வதற்கும் ,விநியோகிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேலதிகமாக பொழுதீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றினால் தயாரிக்கப்படும் 8 உற்பத்தி பொருட்களின் பாவனையை உடனடியாக இரத்து செய்வதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலை அமைச்சரவையில் முன் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் கத்தி, கரண்டி, முள் கரண்டி, ஊதுபத்தி சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன், உரிய பருமைக்கும் குறைவான பொழுதீன்கள், பிளாஸ்டிக் உற்பத்தியிலான பூமாலைகள் மற்றும் இடியப்ப தட்டுகள் ஆகியவற்றையே தடை செய்வதற்கான விடயகங்களே குறித்த பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply