மாகாணங்களுக்கு இடையே பயணத் தடை தளர்த்தப்படும் போது அன்றிலிருந்து வழமைக்கு திரும்பும் பொது போக்குவரத்து சேவைகள்!

0

மாகாணங்களுக்கு இடையே விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையானது தளர்த்தப்படுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைபோன்று பொது போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறெனில் போக்குவரத்தினை வழமைக்கு கொண்டுவர முடியும்.

அத்துடன் சகல அரச சேவைகளும் வழமைபோன்று பணிகளுக்கு திரும்பவுள்ளதால் சன நெரிசல் நிலையை குறைப்பதற்கு பொது போக்குவரத்தை வழமைபோல இயங்க செய்யவேண்டிய தேவையுள்ளது.

மேலும் சுகாதார நடைமுறைகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply