நாட்டில் கொவிட் தொற்றின் தாக்கம் செல்வாக்கு செலுத்தி வரும் நிலையிலும் கூட தற்போது டெங்கு நோய் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வருடத்தில் மாத்திரம் 16,497 பேர் டெங்கு நோய் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஜூலை மாதம் ,3,029 பேரும் ஜூன் மாதம் 2,997 பேரும் குறித்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் டெங்கு நோய் தொற்றினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் மிகுந்த விழிப்புடன் செயற்படுமாறு சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



