நிதியமைச்சர் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்!

0

இலங்கை சுங்க அதிகாரிகளுக்கும் நிதியமைச்சருக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த சந்திப்பின் போது சுங்க அதிகாரிகள் தொழில் ரீதியாக முகங்கொடுக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

அத்துடன் இலங்கை சுங்கத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல நிறுவனங்கள் சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும் போதும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் தரமான வழிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.

மேலும் சேவையாளர்கள் திருப்தியுடன் பணியாற்றுவதற்கு தேவையான வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக கூறிய நிதியமைச்சர் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவோருக்கு சிறந்த சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply