காணி அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழ் கட்சிகள்!

0

முல்லைத் தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைந்துள்ள கடற்படை தளத்திற்கான காணி அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதற்கமையை 617 ஏக்கர் அளவிலான காணிகள் குறித்த கடற்படை தளத்திற்காக பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

இருப்பினும் காணி அளவீட்டு பணிகளுக்கு தமிழ் தேசிய கட்சிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முதல் முல்லைத்தீவு மற்றும் வட்டுவாகல் பகுதிகளில் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அங்கு விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply