தாதியர் சங்கத்தினர் நாளையதினம் நாடுபூராகவும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த பணிப்பகிஸ்கரிப்பு நாளைய தினம் நண்பகல் 12 மணி தொடக்கம் 01 மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தாதியர்கள் தொடர்பில் பல்வேறு வகையான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் பதில் கிடைக்காத காரணத்தினால் இந்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



